கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு திருமங்கலம் , திருப்பரங்குன்றத்தில் சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் சரவண பொய்கையில் புனித நீராடி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 15 November 2024

கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு திருமங்கலம் , திருப்பரங்குன்றத்தில் சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் சரவண பொய்கையில் புனித நீராடி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

 


கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு திருமங்கலம் , திருப்பரங்குன்றத்தில் சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் சரவண பொய்கையில் புனித நீராடி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.


கார்த்திகை 1-ஆம் தேதி சபரிமலை செல்ல ஐயப்ப, பக்தர்கள் மாலை அணிவித்து முதல்நாள் விரதத்தை தொடங்குவது வழக்கம்,

இந்த நிலையில் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள சரவண பொய்கையில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள்,  மாலை அணிவித்து இன்று முதல் நாள் விரதத்தை தொடங்கினர்.


சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை 1ம் தேதி துவங்கி மண்டல பூஜைகள் நடக்கும். தொடர்ந்து தை ஒன்றாம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும்.


இதற்காக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 40 நாட்கள் விரதம் இருந்து இருமுடி சுமந்து பயணம் சபரிமலை பயணம் செல்வர். அதேபோல் திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ துளசி மணி ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிவித்து அய்யப்பன், முருகனை தரிசனம் செய்வதற்காக பழனி, திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும்  முருக பக்தர்களும்  தங்களது விரதத்தை தொடங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad