ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் சிவபெருமானுக்கு அன்னம் படைக்கப்படும்.அதனை முன்னிட்டு இன்று பெளர்ணமி தினத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சிவாச்சாரியார் சங்கரநாராயணன், கணபதி,சீனிவாசன், சரவணன் ஆகியோர் சிவனுக்கும், காசிவிஸ்வநாதருக்கும் அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்தனர்.இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் அறங்காவலர்கள் தண்டபாணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.அதேபோல் திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
No comments:
Post a Comment