மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் - அதிகாலையிலேயே 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு.
மதுரை விமான நிலைய அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் அக்கிராம மக்கள் தங்களுக்கு மாநகராட்சி பகுதியில் 2 சென்ற இடம், மீள்குடி அமர்வு, உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்பு நிலத்தை கையகப்படுத்தக் கோரி கடந்த நான்கு நாட்களாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்த வந்தவருவாய் கோட்டாட்சியர் கார்த்திகாயனி தெற்கு தாசில்தார் விஜயலட்சுமி விமான நிலைய நில எடுப்பு தாசில்தார் பாஸ்கரன் உள்ளிட்டோர் ஜேசிபி வாகனங்களுடன் வருகை தந்த போது அவர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று விமான நிலைய விரிவாக்கத்திற்கு நலத்தை கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் வரவுள்ள நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
சின்ன உடைப்பு கிராமத்திற்கு அவசர உதவிக்காக இரண்டு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டுள்ளது.
சின்ன உடைப்பு கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
சின்ன உடைப்பு கிராமத்திற்கு வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக பத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சின்ன உடப்பு கிராம மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மூன்று பெண்கள் எட்டு ஆண்கள் உட்பட மொத்தம் 16 பேர் உள்ளனர் தற்போது அவர்கள் தற்கொலை செய்வதற்காக இரண்டு கேள்விகளை பெட்ரோல் நிரப்பி மேல்நிலை நீர்த்திக்க தொட்டியில் உள்ளதால் மிகவும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
இதற்கிடையில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த வருவாய் துறை காவல் துறை அதிகாரிகளுடன் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சு வார்த்தை நடத்தியதில் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment