நிரந்தர நடவடிக்கை எடுங்கள் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கை - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 17 November 2024

நிரந்தர நடவடிக்கை எடுங்கள் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கை

 


நிரந்தர நடவடிக்கை எடுங்கள் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கை



பாதாள சாக்கடை கழிவு நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் வைரஸ் காய்ச்சல் பரவும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் மாநகாரட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு.




மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 71 வது வார்டு மாடக்குளம் பெரியார் கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்லக்கூடிய மின் மோட்டார் பழுதானதால் அடிக்கடி பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து கழிவு நீர் குடியிருக்கும் சாலை பகுதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் வைரஸ் காய்ச்சல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு உண்டாக்குவதாகவும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆணையாளர் வார்டு கவுன்சிலர் அவர்களிடம் புகார் கொடுத்தற்கு  மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சக்கடை தொட்டியை மேலே செயற்கையாக உடைப்பு ஏற்படுத்தி அருகே உள்ள வயல்வெளிக்கு கழிவு நீர் செல்வதற்கு வழி வகை  ஏற்படுத்தி சென்றதாகவும்   இதனால்  நோய் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை மற்றும்  நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது பாதள சாக்கடை கழிவு நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் முதல்வர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்படும் மேலும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad