உதயநிதியை கன்சிடர் பண்ணவே இல்லை. உதயநிதியை நாங்கள் துணை முதல்வராக அல்ல விளையாட்டுத்துறை அமைச்சராக கூட பார்க்கவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கள் பொதுச் செயலாளரிடம் திட்டங்களில் உள்ள கருணாநிதி பெயரை மாற்ற வேண்டாம், ஆனால் தீய சக்தி கருணாநிதி என சேர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் வேண்டுகோள் விடுப்போம்.
24 மணி நேர சேவைக்கு விமான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஆனால் அவர்கள் இன்னும் தயாராக இல்லை. -எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி
வருகிற 16-ஆம் தேதி அதிமுக சார்பாக திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் மற்றும் சாலை சீரமைப்பு செய்யக்கோரி அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேவர் பிளாக் மற்றும் அங்கன்வாடி மையம் அமைப்பது என 25 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது
திருப்பரங்குன்றத்தில் உள்ள தெங்கால் கண்மாயை ஒட்டி சாலை அமைப்பது தொடர்பாக வண்டல் மண் எடுக்கப்படுகிறது. அது தொடர்பாக வழக்கறிஞர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு நீர்வளத்துறை மாநகராட்சியை கையை காட்டுகிறார்கள், நெடுஞ்சாலைத்துறை நீர்வளத் துறையை கை காட்டுகிறார்கள். மூன்று துறையும் ஒருவரை ஒருவர் சாட்டுகிறார்களே தவிர யாரும் தகவலை கொடுக்க தயாராக இல்லை. இது மோசடி திட்டமாக நடைபெறுகிறது, நிர்வாக சீர்கேடு நடைபெறுவது தெரிகிறது. இந்த அரசின் துறைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி குறித்த கேள்விக்கு
அவர்கள் அனுமதி மறுக்கவில்லை ஆனால் இன்னும் பதில் சொல்லவில்லை எனவே போராட்டம் நிச்சயம் நடைபெறும்.
எடப்பாடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என துணை முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு
ஏட்டுக்கு போட்டி பேசக்கூடாது. எங்கள் பொதுச் செயலாளர் முதல்வரை விவாதிக்க அழைத்தார். அதற்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டுமே தவிர துணை முதல்வர் தலையாட்டுவது யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. பதில் சொல்வதற்கு உதயநிதி யார். உதயநிதியை கன்சிடர் பண்ணவே இல்லை. உதயநிதியை நாங்கள் துணை முதல்வராக அல்ல விளையாட்டுத்துறை அமைச்சராக கூட பார்க்கவில்லை. ஸ்டாலின் எப்போது தயாராக இருக்கிறாரோ அப்போது எங்கள் எடப்பாடியார் விவாதிக்க வருவார். எடப்பாடி யார் தலைமையில் மதுரையில் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்பதற்கான வீடியோக்களை ஆர்ப்பாட்டத்தின் போது போடுவோம்.
ஸ்டாலின் இரண்டே இரண்டு திட்டங்களை சொல்கிறார் ஒன்று ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றொன்று கலைஞர் நூலகம். இந்த இரண்டும் பொதுவான மக்களுக்கான திட்டமல்ல. ஜல்லிக்கட்டுக்கு அதிமுக தான் ஊண்டு கோல். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் அலங்காநல்லூரில் தான் இருக்க வேண்டும் ஏதோ மலைக்குள் கட்டி வைத்துள்ளார்கள். அது ஒரு ஆண்டுக்கு ஒருநாளை தவிர மற்ற 364 நாளும் சும்மாதான் இருக்கிறது. கலைஞர் நூலகத்தையும் மக்கள் முழுவதுமாக பயன்படுத்தவில்லை. கலைஞர் நூலகத்தை எத்தனை பேர் பயன்படுத்தி உள்ளார்கள் என வெள்ளையா இருக்கையை வெளியிடுங்கள். எங்களைப் பொறுத்தவரை கருணாநிதி ஒரு தீய சக்தி. ஒரு கட்சித் தலைவர் உதாரணத்திற்கு சொன்னதைப் போல நாங்கள் சொல்லவில்லை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கள் பொதுச் செயலாளரிடம் கருணாநிதி பெயரை மாற்ற வேண்டாம் ஆனால் தீய சக்தி கருணாநிதி என சேர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் வேண்டுகோள் விடுப்போம்.
திமுகவும் எங்களை விமர்சிப்பார்கள் அவர்கள் விமர்சனம் பெரியதா, எங்கள் விமர்சனம் பெரியதா என்பதுதான் போட்டி. மாண்புமிகு முதல்வரை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்குவோம் என ஆசிரியர்கள் தெளிவாக, நாகரீகமாக சொல்லிவிட்டார்கள். அதற்கு அரசாங்கத்தை எடப்பாடியாரிடம் ஒப்படைக்கும் என்றுதான் பொருள். ஆனால் அவர்களால் எதிர்க்கட்சித் தலைவராக கூட வர முடியாது என்று தான் நாங்கள் கணக்கிடுகிறோம்.
விமான நிலையம் 24 மணி நேர சேவை குறித்த கேள்விக்கு
24 மணி நேர சேவைக்கு விமான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இன்னும் தயாராக இல்லை. மதுரை விமான நிலையத்திற்கு பயணிகள் வரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். தூத்துக்குடி, திருச்சியில் விமான நிலையங்கள் இருப்பதால் இங்கு குறைகிறது. விமான நிறுவனங்கள் அவர்களாக வந்து செயல்பட கேட்க வேண்டும் அதற்கான நிலை விரைவில் வரும் என கூறினார்.
No comments:
Post a Comment