திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் அருகே உள்ள மறவன் குளம் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக நாட்டு நலப் பணிகளை மேற்கொண்டனர். இன்று நிறைவு விழாவில் மாணவிகளுக்கு திருமங்கலம் நகர் மன்ற உறுப்பினரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான ஜா.ரம்ஜான் பேகம் ஜாகிர் உசேன் மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். இவ்விழாவில் பள்ளியினுடைய தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி முன்னால் தலைமை ஆசிரியர் கர்ணன் ,எஸ்.எம்.ஜாகிர் உசேன் வாழ்த்துறை வழங்கினர்.
மேலும் இவ்விழாவில் வருகிற 27ம் தேதி தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் ரம்ஜான்பேகம் ஜாகிர்உசேன் அவர்கள் பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்தார்.
No comments:
Post a Comment