திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த சுற்றுலா பக்தர்களால் திருவிழா போல் காட்சியளித்த திருப்பரங்குன்றம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 23 November 2024

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த சுற்றுலா பக்தர்களால் திருவிழா போல் காட்சியளித்த திருப்பரங்குன்றம்.

 


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த சுற்றுலா பக்தர்களால் திருவிழா போல் காட்சியளித்த திருப்பரங்குன்றம்.



தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் மற்றும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தந்து முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்ய வருகை தந்த நிலையில் திருவிழா போல் காட்சி அளித்த திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்


ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் மாலை அணிவித்து 48 நாள் ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து அவர்களது விரதத்தை தொடங்கினர் பல்வேறு மாவட்டத்தில் இருந்து அதிகளவு பக்தர்கள் வருகை தந்ததால் திருப்பரங்குன்றத்தில் திருவிழா போல் காட்சி அளித்தது எங்கு திரும்பினாலும் மனித தலைகளால் காட்சியளிக்கப்பட்டது



இந்நிலையில் கார்த்திகை மாதம் மற்றும் விடுமுறை தினம் என்பதால் திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. தைப்பூசம், வைகாசி விசாகம் மற்றும் சஷ்டி காலங்களில் தான் முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படும் ஆனால் இம்முறை கார்த்திகை மாதமே சேலம் நாமக்கல் திருப்பூர் கோவை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு  பக்தர்கள் சாரை சாரையாக வந்து சாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சுற்றுலாவாக அதிகளவு பக்தர்கள் வருகை தருவதால் திருப்பரங்குன்றத்தில் பார்க்கிங் வசதி குறைந்த அளவு உள்ளதாகவும் இதனால் ஆங்காங்கே வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து காவல்துறையினர் ஆபரணம் விதிப்பதாகவும் இருப்பினும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளியூர்களிலிருந்து வரும் வருகை தரும் பக்தர்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங் கட்டணம் செலுத்தினாலும் சாலை ஓரங்களில் நிறுத்தி விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கழிப்பறை வசதிகள் குறைந்த அளவு உள்ளதாகவும் குறைபாடுகளாக சுற்றுலா பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad