தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நவம்பர் மாதம் முதல் தேதியில் ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்த ஆண்டு தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதனால் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதன் படி மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களான சின்ன மறவன் குளத்தில் அமைந்துள்ள வையம் பட்டி ஊராட்சி, வடகரை ஊராட்சியான சுங்கராம்பட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.மேலும் சாலை வசதிகள், கழிவுநீர் வாய்க்கால், தண்ணீர் குழாய் இணைப்புகள், ஆகியவற்றுக்கான மனுக்கள் பெறப்பட்டன.14 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊர் பொதுமக்கள், அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், வட்டாட்சியர்கள், கிராம நிர்வாகிகள், மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment