மதுரை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 2 October 2024

மதுரை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது


மதுரை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களான மறவன்குளம், கரிசல் பட்டி,வடகரை கப்பலூர்,உச்சப்பட்டி ஆகிய கிராமங்களில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சிசிகளில் தண்ணீர் வசதி,சாலை வசதிகள், மேல்நிலை தேக்க தொட்டி ஆகியவற்றிற்கான வேலைகள் செய்யாமல் கிடப்பில் உள்ளது.இதை செய்து தரக் கோரி பொதுமக்கள் அனைவரும் மனுக்களை கொடுத்தனர் மேலும் அரசிடம் இருந்து போதிய நிதி இல்லாத நிலையில் இந்த வேலைகள் கிடப்பில் உள்ளது என்று பஞ்சாயத்து தலைவர் ராமு கூறினார்.விரைவில் அனைத்து வேலைகளையும் முடித்து தரப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad