கல்குவாரி அமைக்க கிராம மக்கள் ஒன்று திரண்டு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு - கிராம சபை கூட்டத்தில்கண்மாய், ஊரணிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் தீர்மானம் .
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில், சில தினங்களுக்கு முன்பு, தனிப்பட்ட நபரின் பெயரில் கல்குவாரி அமைப்பதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொண்ட போது, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ,
இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் , இது குறித்து பேசப்பட்ட போது ,
திருமால் கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கூட்டம் நடத்திய அதிகாரிகள் அலுவலர்கள் முன்பு, ஒட்டுமொத்தமாக கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. கல்குவாரி அமைப்பதால் அருகாமையில் உள்ள பள்ளி, ஆலயங்கள் , வீடுகள் உள்ளிட்டவை நில அதிர்வு ஏற்பட்டு கட்டிட விரிசல் ஏற்படுவதாகவும், நீர் ஆதாரம் மற்றும் விவசாய பயிர்கள் நாசம் அடைவதுடன், கல்குவாரியிலிருந்து வெளியேறும் துகள்கள் விழுந்து விவசாயம் அழிந்து வரும் நிலை உண்டாகிறது என விவசாயிகள் தெரிவித்தனர் .
இதனை தொடர்ந்து அக்கிராமத்தில் உள்ள கண்மாய் மற்றும் ஊரணிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment