மகாத்மா யோகா மையத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 2 October 2024

மகாத்மா யோகா மையத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா

 


மகாத்மா யோகா மையத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா


அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


மதுரை காந்தி மியூசியத்தில் மகாத்மா யோகா மையத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அங்கு அமைந்துள்ள காந்தி சிலைக்கு அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:
காந்தியின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் இன்றைய சூழலிலும் மிகவும் பொருத்தமானவை என்றும் உலக நாடுகள்  அனைத்திலும் காந்திய சிந்தனை பிரபலம் அடைந்து வருவதாகவும், அவரது வாழ்க்கை மற்றும் அகிம்சை போராட்டங்கள் இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது எனவும், வன்முறை தவிர்த்து மத நல்லிணக்கத்தை பேணி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்  என கூறினார்.
நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர்கள் சிவக்குமார், ரமேஷ்,  நிர்வாகிகள் குமார், பூமிநாதன், முத்துச்செல்வம், பழனி முருகன், பாப்புலர் செல்வம் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை யோகா மைய நிர்வாகி பாலாஜி செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad