திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று பசுமலையில் அம்பு எய்தல் விழா - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 12 October 2024

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று பசுமலையில் அம்பு எய்தல் விழா


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று பசுமலையில் அம்பு எய்தல் விழா


புரட்டாசி மாதத்தில் வருண பகவான் எழுந்து எட்டு திக்கிலும் மழை பொழிய சுப்பிரமணிய சுவாமி அம்பு எய்தல் நிகழ்சி நடைபெறும்.


திருப்பரங்குன்றம் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி விழாவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக அம்பு எய்த விழா இன்று பசுமலை மண்டபத்தில் நடைபெற்றது.


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி விழா கடந்த 3ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் கோவர்த்தனாம்பிகைக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம், சிவபூஜை, அர்த்தநாரீஸ்வரர், மகிஷாசுர வர்த்தினி உள்ளிட்ட பல்வேறு  அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் நிறைவு நாளான இன்று மாலை 6 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி பசுமலையில்  அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுவார். அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து பசுமலை மண்டபத்திற்கு புறப்பாடானார்.


வழிநெடுகிலும் மண்டப திருக்கண்ணில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


எட்டுத்திக்கும் பலி கொடுக்கப்பட்டு நான்கு திசைகள் மற்றும் மேல் நோக்கி அம்பு போடப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


புரட்டாசி மாதத்தில் வர்ண பகவானை வரவழைக்க எட்டு திசையிலும் அன்பு செய்யப்படும் மேலும் விவசாயம் செழிக்கவும் மக்கள் நோயின்றி வாழவும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.


விழாவிற்கான ஏற்பாடுகளை பசுமலை மண்டப பொறுப்பாளர் அழகு மற்றும் திருக் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா அறங்காவலர்கள் சண்முகசுந்தரம் பொம்ம தேவன் மணி செல்வம் ராமையா மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad