சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆயுத பூஜையை முன்னிட்டுசிறப்பு வழிபாடு நடைபெற்றது
மதுரை மாவட்டம்
சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆயுதபூஜையை முன்னிட்டு நேற்று காலை முதல் அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்தனர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டது ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் காட்சி அளித்தார் அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார் செயல் அலுவலர் இளமதி பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
No comments:
Post a Comment