நவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
நவராத்திரி திருவிழா நேற்று ஆரம்பமாகியது.இந்த தினத்தில் ஒன்பது நாளும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருவார்.அதே போல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அருள் மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நவராத்திரி இரண்டாம் திருவிழாவையொட்டி இன்று மீனாட்சியம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி தந்தார் மேலும் 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment