மதுரையில் எட்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டகள் வரும் டிசம்பர் 24 முதல் 31 வரை நடைபெறுகிறது.
20 சுற்று செஸ் போட்டிகளில்கிழக்கு ஏத்தன்ஸ் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் சதுரங்க போட்டிக்கு 44 லட்சம் ரொக்கப் பரிசாக அறிவிப்பு; தமிழகத்தில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியிலேயே அதிகபட்ச பரிசு தொகை அறிவித்து சாதனை
அனைத்திந்திய செஸ் இன் ஸ்கூல் என்கிற அமைப்பு சார்பாக பள்ளிகளில் சதுரங்கப் போட்டிகளை கட்டாயம் ஆக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. -தமிழ்நாடு சதுரங்க கூட்டமைப்பு இணை செயலாளர் பிரகதிஸ் பேட்டி
மதுரை மாவட்ட சதுரங்க வட்டம் மற்றும் அனந்தி சதுரங்க அகாடமி இணைந்து வருகிற டிசம்பர் 24 முதல் 31ம் தேதி வரை தென்திசையின் ஏத்தன்ஸ் என்ற நான்காவது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. இது தொடர்பாக மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அதற்கு முன்னதாக டிசம்பர் 24 இல் நடைபெறும் ஏஜென்ஸ் ஆப் தி ஈஸ்ட் நாலாவது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டிக்கான அறிமுக விழா நடைபெற்றது.
இதில் அகில இந்திய ஜஸ்ட் கூட்டமைப்பின் செயலாளர் தேவ் பட்டேல்,தமிழக செஸ் கூட்டமைப்பின் செயலர் ஸ்டீபன் பால்சாமி, மாநில பொருளாளர் சீனிவாசன், மதுரை வல்லப பள்ளி செயலாளர் அருண்,மதுரை செஸ் . கூட்டமைப்பின் உமா மகேஸ்வரன், மற்றும் கிராண்ட் மாஸ்டர் போட்டிக்கான இயக்குநர் பிரகதீஷ் மற்றும் நான்காவது கிராண்ட் மாஸ்டர் ஸ்கூட்டி காணும் ஒருங்கிணைப்பாளர் லோகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு சதுரங்க கூட்டமைப்பு இணைச்செயலாளர் மற்றும் இயக்குனர் பிரகதீஷ் குறிப்பிடுகையில்,
தென் திசையின் ஏதன்ஸ் சதுரங்க போட்டி 2019 ஆம் ஆண்டு முதல் வலுப்பெற்று வருகிறது. கொரோனா காலமாக நான்கு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில் தற்போது 44 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது உலக சாதனையை ஏற்படுத்தப் போகிறது. அதோடு சேர்த்து இரண்டு கார்கள் ஆறு பைக் மற்றும் 100 சைக்கிள்களும் வழங்கப்பட உள்ளது. உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் ஆண்டுக்கு இரண்டு கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டிகள் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியின் ஏ பிரிவு இந்தியா இளம் வீரர்களின் கிராம் மாஸ்டர் மற்றும் இன்டர்நேஷனல் மாஸ்டர் சாதனைகளை வளர்க்கும் நோக்கில் நடத்தப்படுகிறது. இதில் 25 நாடுகளில் இருந்து பல கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் இன்டர்நேஷனல் மாஸ்டர்கள் பங்கேற்பார்கள். மொத்தம் பத்து சுற்றுகள் நடைபெறும் போட்டியில் டிசம்பர் 24 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் ஒவ்வொரு சுற்றும் சுமார் நான்கு மணி நேரம் நீடிக்கும் 26 மற்றும் 28ஆம் தேதிகளில் இரண்டு சுற்றுகள் மற்றும் மற்ற தினங்களில் ஒரு சுற்று நடைபெறும் எனவும் பி பிரிவில் 10 சுற்றும் சி பிரிவில் 9 சுற்றுகளும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதத்திற்கு இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு நுழைவு கட்டணம் கூட நாங்கள் வாங்குவதில்லை. அனைத்திந்திய செஸ் இன் ஸ்கூல் என்கிற அமைப்பு சார்பாக பள்ளிகளில் சதுரங்கப் போட்டிகளை கட்டாயம் ஆக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என கூறினார்..
போட்டிகளில் பங்கேற்கும் 600க்கும் மேற்றபட்ட வீராகளுக்கு ரூபாய் 44 லட்சம் ரொக்க பரிசுகளுடன் இரண்டு கார்கள், ஆறு பைக்குகள் 100 சைக்கிள்கள் செஸ் வீரர்களுக்கு பரிசாக வழங்கபடுகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் செஸ் விளையாட்டு போட்டியை மாணவர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக செஸ் விளையாட்டு கழகத்தினர் கோரிக்கை.
கிழக்கு ஏத்தன்ஸ் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் சதுரங்க போட்டிக்கு 44 லட்சம் ரொக்கப் பரிசாக அறிவிப்பு; தமிழகத்தில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியிலேயே அதிகபட்ச பரிசு தொகை அறிவித்து சாதனை
No comments:
Post a Comment