திருமங்கலம் பிரம்மகுமாரிகள் சபையில் நவராத்திரி கொலு கண்காட்சி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 4 October 2024

திருமங்கலம் பிரம்மகுமாரிகள் சபையில் நவராத்திரி கொலு கண்காட்சி


திருமங்கலம் பிரம்மகுமாரிகள் சபையில் நவராத்திரி கொலு கண்காட்சி


முன்னாள் எம்.பி., என்.எஸ்.வி. சித்தன் மற்றும் அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் பங்கேற்பு


திருமங்கலம் பிரம்ம குமாரிகள்  ராஜயோக தியான மையத்தில் நவராத்திரி கொலு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முதலாம் நாளான நேற்று முன்னாள் எம்.பி., என்.எஸ்.வி. சித்தன் மற்றும் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் உள்ளிட்டார் கலந்து கொண்டனர். தியான சபையின் பொறுப்பாளர் சகோதரி புனிதா வந்திருந்தவர்களை வரவேற்று ஆற்றிய உரையில் கொலு கண்காட்சியின் முக்கியத்துவம், ஆன்மீக வழிபாடு, மற்றும் தியானம் செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். பின்னர் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி. என்.எஸ்.வி. சித்தன், பிரம்ம குமாரிகள் சபையின் ஆன்மீக சேவையை பாராட்டிப் பேசினார்.


அடுத்து உரையாற்றிய அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், நமது நாடு அதிகமான பண்டிகைகள்  கொண்ட நாடு எனவும் பண்டிகைகள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்க கூடியதாக உள்ளது என்றும், மனித உறவுகளை மேம்படுத்தக் கூடியது எனவும்,  ஒருவர் மன உறுதியுடன் விளங்க ஆன்மீக பயிற்சி அவசியம் என்றும் பிரம்ம குமாரிகள்  நடத்தும் ராஜயோக தியான சபை மூலம் தியான பயிற்சி பெற்று மாணவர்களும், இளைஞர்களும் தங்களுடைய மன ஆரோக்கியத்தை பெற்று நெருக்கடியான காலகட்டத்தை சமாளிக்கும் திறனை பெறலாம் என்றும் கூறினார்.


கொலு ஏற்பாடுகளை தியான சபையின் பொறுப்பாளர்கள் சகோதரிகள் புனிதா மற்றும் சரோஜினி ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலந்து கொண்ட பெரியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad