திருமங்கலம் நகராட்சியில் டென்டர் எடுப்பதில் திமுக, அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் டென்டர் எடுப்பதில் திமுக, அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது.மாதம் ஒருமுறை நகராட்சி கூட்டத்தில் திருமங்கலம் பேருந்து நிலையம், வாகன காப்பகம் ஆகியவற்றிற்கு நகர் தலைவர் முன்னிலையில் தீர்மானம் நிறைவற்றி டென்டர் நடத்தப்படும்.அதேபோல் இன்று டென்டர் சம்பந்தமாக திமுக, அதிமுக ஆகிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என்று இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சல சலப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த திருமங்கலம் இன்ஸ்பெக்டர், போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் சென்டர் மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. நகராட்சி அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.
No comments:
Post a Comment