சென்னை, பெங்களூரில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் மதுரையில் கனமழை காரணமாக தரையிறங்காமல் 40 நிமிடங்கள் வானில் வட்டம் அடித்தது.பரபரப்பான சூழ்நிலையில் இரவு 9:20 மணி அளவில் பெங்களூரூ விமானம் தரை இறங்கியது.பெங்களூர் மதுரை விமானத்தில் 58 பயணிகள் பயணம் செய்தனர்.
அதனை தொடர்ந்து ஒன்பது முப்பது மணி அளவில் சென்னை - மதுரை விமானமும் பத்திரமாக தரையிறங்கியது.சென்னை மதுரை விமானத்தில் 77 பயணிகள் பயணம்.
சென்னை பெங்களூர் விமானத்திலிருந்து மொத்தம் 135 பயணிகள் பத்திரமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
இரவு 8.30 விமானம் கனமழை காரணமாக அரை மணி நேரமாக வானில் வட்டமடித்து பின் மதுரை வந்த இண்டிகோ விமானம் 9 20 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது .
மேலும் இரவு 8.40 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை வரும் இண்டிகோ விமானம் இரவு 9.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
40 நிமிடங்களுக்கு மேல் கனமழை காரணமாக வானில் வட்டமடித்த விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்கியது
இரண்டு விமானங்களும் கன மழை காரணமாக சுமார் 40 நிமிடம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பாக காணப்பட்ட மதுரை விமான நிலையம் .
No comments:
Post a Comment