அங்கன்வாடி மையத்தில் 3 வயது குழந்தைக்கு முழங்காலில் சூடு.
முழங்காலில் உள்ளங்கை அளவு கொப்பளம் வெடித்ததில் வேதனையில் கதறும் குழந்தை
அங்கன்வாடி பணியாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்த பெற்றோர்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது இடையபட்டி கிராமம் இந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆயாவாக பணிபுரிபவர் புஷ்பம்
இதே கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவரின் 2 1/2 வயது மகள் ஷாத்மிக்கா என்பவர் இங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு தினசரி சென்று வருகிறார்
இந்த நிலையில்
அங்கன்வாடி மையத்தில் ஆயாவாக பணிபுரியும் புஷ்பம் என்பவர் தனசேகரின் மகள் ஷாத்மிக்கா வின் முழங்காலில் தொடர்ச்சியாக சூடு வைத்ததாக தெரிகிறது
இது குறித்து நேற்று முன்தினம் முழங்கால் வலிப்பதாக ஷாத்மிக்கா அழுது கொண்டே இருந்ததை தொடர்ந்து தந்தையான தனசேகர் கேட்டபோது எதுவும் சொல்லத் தெரியாமல் அழுது கொண்டே இருந்துள்ளார்
இதனைத் தொடர்ந்து நேற்று அங்கன்வாடி மையத்திற்கு குழந்தையை அழைத்துக் கொண்டு சென்று விசாரித்ததில் பணியாளர் புஷ்பம் என்பவர் குழந்தையின் முழங்காலில் சூடு வைத்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் சூடு வைத்ததில் முழங்காலில் உள்ளங்கை அளவு கொப்புளங்கள் வெடித்து பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்த நிலையில் தனசேகர் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் மனு அளித்துள்ளார் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாக தனசேகர் கூறினார்
சுமார் இரண்டரை வயதே ஆன பச்சிளம் குழந்தைக்கு முழங்காலில் சூடு வைத்த சம்பவம் அலங்காநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment