மூவரை கொலை செய்ய முயற்சி ஒருவர் வெட்டி கொலை சிறுவன் உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 3 October 2024

மூவரை கொலை செய்ய முயற்சி ஒருவர் வெட்டி கொலை சிறுவன் உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை


 மூவரை கொலை செய்ய முயற்சி ஒருவர் வெட்டி கொலை சிறுவன் உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை


மதுரை மாவட்டம்
சோழவந்தான் அருகே முகத்தில் மிளகாய் தூள் அடித்து இளைஞர் வெட்டி படுகொலை
திருவேடகம் பகுதியில் சிறுவன் உட்பட 3 பேருக்கு சரமாரியாக வெட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை போலீசார் விசாரணை


சோழவந்தான் பகுதியில் ஒரே நாளில் ஒருவர் கொலை மற்றும் சிறுவன் உட்பட மூன்று பேர் கொலை முயற்சியால் பரபரப்பு பதட்டம் ஏற்பட்டுள்ளது


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வசித்து வரும் சதீஷ் என்ற சிவாஜி 45 கொத்தனார் வேலை செய்து வருகிறார்


இந்நிலையில் நேற்று இரவு செக்கானூரணியில் இருந்து வேலை முடித்து வாகனத்தில் வரும்போது மேலக்கால் கணவாய் கருப்பு கோவில் அருகே சதீஷை வழி  மறித்த மர்மமகும்பல் அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி சரமாரியாக வெட்டியதில் சதீஷ் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்


இதனைத் தொடர்ந்து காடுபட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சதீஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 


ஆனால்அவர் செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார் இச்சம்பவம்  மேலக்கால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பதட்டமாக இருப்பதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்


சோழவந்தான் அருகே வீடு புகுந்து கத்திக்குத்து ஏழு வயது சிறுவன் உள்பட மூன்று பேர் படுகாயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன்


சோழவந்தான் அருகே திருவேடகம் காளியம்மன் கோவில் தெரு  பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யனார் வயது 40 இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி அவரது மனைவி தவமணி  மற்றும் பேரன் சிறுவன் மிதுன் ஆகியோரை அய்யனார் மது போதையில்  வீடு புகுந்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்


முத்துச்சாமி தவமணி சிறுவன் மிதுன்   ஆகியோர் படுகாயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் சிறுவன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்

 
சோழவந்தானில் ஒருவர் மிளகாய் தூள் அடித்து கொலை செய்யப்பட்ட சூழ்நிலையில் மூன்று பேருக்கு சரமாரியாக வெட்டு விழுந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட  இரு சம்பவங்கள்  அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad