நவராத்திரி விழாவையொட்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண் - னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர் - ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி பிரார்த்தனை.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் நடத்திவரும் ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் (49) கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் உருவத்தில் கருங்கல்லினாலான உருவச் சிலை அமைத்து , மற்றும்அவருக்கு இல்லத்தில் அதற்கான தனி அறை அமைத்து , ரஜினி கோவில் என்ற பெயரில்,
நாள்தோறும் ரஜினிக்கு பால், தயிர், தேன் ,இளநீர் உள்ளிட்ட 9 வகையான அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு பூஜை நடத்தி பூஜித்து வரும் நிலையில், தற்போது நவராத்திரி விழாவையொட்டி ரஜினியின் அபூர்வராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் உருவங்களை மரப்பலகையினாலும் களிமண் - னாலும் கொலு பொம்மைகளாக வடிவமைத்து, பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளார்.
மேலும் ரஜினியின் உடல் பூரண குணமடைய வேண்டியும் பிரார்த்தனை செய்து வருவதாககார்த்திக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment