மதுரை அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சட்டபேரவை அறிவிப்பின் திட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 21 October 2024

மதுரை அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சட்டபேரவை அறிவிப்பின் திட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்றது.


மதுரை அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சட்டபேரவை அறிவிப்பின்  திட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்றது.


மணமகளுக்கு 4 கிராம் தாலி மற்றும் ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிகள் வழங்கப்பட்டது.

மதுரை அவனியாபுரத்தில் உள்ளபழமை வாய்ந்த பாண்டிய மன்னர் காலத்திய கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சட்டமன்ற அறிவிப்பு கிட்டத்தின் கீழ் திருக்கோயிலில்  திருமணம் நடைபெற்றது.

மணமகன் சுந்தரேஷ் மற்றும் மணமகள் மகேஸ்வரிக்கும் கல்யாணசுந்தரேஷ்வரர் சன்னதியில் 92 வது மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி தலைமையில் கோவில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் அர்ச்சகர் நாக சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் பணியாளர்கள் எழுத்தர் காளீஸ்வரன்,சதீஷ்குமார் சரவணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

திருக்கோயில் திருமண திட்டத்தின் கீழ் மணமகளுக்கு மணமகளுக்கு நான்கு கிராம் தங்கத்தில் தாலியும் மற்றும் கட்டில் மெத்தை பாத்திரங்கள் உட்பட சீர்வரிசைகள் ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகள் மணமக்களுக்கு  வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad