மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 22 October 2024

மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு


மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் குடிநீரை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு


இரண்டு நாள் அரசு நிகழ்ச்சிகளில்  பங்கேற்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். முதலில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் விமான நிலையம் அருகே உள்ள வளையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின்போது வெளி நோயாளிகள் எவ்வளவு பேர் வருகிறார்கள் அவர்களுக்கான சிகிச்சை மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி மருந்து எவ்வளவு இருப்பு உள்ளது. போன்ற விவரங்களை கேட்டு அறிந்தார். தொடர்ந்து இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடிநீரை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட சுகாதார இயக்குனர் குமரகுருபரன், வட்டார சுகாதார அலுவலர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகுமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad