இருசக்கர வாகனத்தில் சென்ற இரு பெண் துப்புரவு தொழிலாளர்கள் மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானதில், லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு - லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் - விமான நிலைய சாலையில் உள்ள ரயில்வே நிலையம் அருகே திருமங்கலம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரியும் நாகரத்தினம் (41) மற்றும் லட்சுமி (40) ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே வந்த கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானதில், லாரியின் சக்கரத்தில் தவறி விழுந்த இரு பெண் தொழிலாளர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே இரு பெண்களின் தலை நசுங்கி உயிரிழந்தனர்.
இரு பெண்களுடன்இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் மற்றும் லாரியின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் . இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து , உயிரிழந்த இரண்டு பெண்களின் உடல்களை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு, திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment