மதுரையில் ஆட்டோ ஓட்டுனர் ராஜா என்பவர் பிரகாஷ் சிறுமியை கலரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்து விட்டதாக பகுதியில் வதந்தியை கிழப்பி விட்டதால் மனம் உடைந்த பிரகாஷ் சாவுக்கான காரணத்தை வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
மதுரை பைக்ரா மேட்டு பகுதிதை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார் இவர் தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்று வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அதில் அவர் கூறியதாவது
என்னுடைய சாவுக்கு ஆட்டோ ஓட்டுநர் ராஜா தான் காரணம் பத்து நாளாக நான் வண்டிக்கு போய் விட்டேன் ஊர் முழுவதும் நான் சிறு பிள்ளையை கூட்டி விட்டு ஓடி விட்டேன் என்றும் நான்கு பேருடன் வந்து அந்த சிறு பிள்ளையை கெடுத்து விட்டேன் என்றும்
என்னை தவறாக சித்தரித்து நான் வாழும் பகுதி முழுவதும் வதந்தியை பரப்பிவிட்டதால் ஊருக்குள்ளே என்னால் போக முடியவில்லை
அதனாலதான் இந்த முடிவு எடுத்து விட்டேன் என் சாவுக்கு ராஜா தான் காரணம் குடிக்கின்ற கலரில் மயக்க மருந்து கலந்து அப்பகுதியில் உள்ள சிறுமியை கெடுத்து விட்டதாகவும் ராஜா என்பவர் ஊர் முழுவதும் வதந்தி பரப்பி விட்டதால் மன உளைச்சலால் நான் தற்கொலை செய்யப் போகிறேன் என்று ஒரு வீடியோ பதிவிட்டு அச்சம்பத்து பகுதியில் உள்ள தனியார் ஒர்க் ஷாப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துவிட்டார் அதனால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் சம்பவம் அறிந்த நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதனால் பிரகாஷ் குடும்பத்தார் ஆட்டோ ஓட்டுனர் பிரகாசை தவறாக சிறுமியை கலரில் மயக்க மருந்து கொடுத்து கெடுத்து விட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் பொய்யான வதந்தியை பரப்பியதால் தான் மனம் உடைந்த தற்கொலை செய்துவிட்டார் என்று நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
No comments:
Post a Comment