ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்தவிஞ்ஞானிகள் விரிவாக்க பணியாளர்கள் விவசாயிகள் இணைப்பினை வலுப்படுத்தும் முகாம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 1 October 2024

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்தவிஞ்ஞானிகள் விரிவாக்க பணியாளர்கள் விவசாயிகள் இணைப்பினை வலுப்படுத்தும் முகாம்

 


மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாரம் வேளாண்மை துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 2024- 25 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் திருமங்கலம் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட கீழக்கோட்டை கிராமத்தில்பயிர் வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்தவிஞ்ஞானிகள் விரிவாக்க பணியாளர்கள்  விவசாயிகள் இணைப்பினை வலுப்படுத்தும் முகாம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர்  மயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர் .வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் சுரேஷ் பயறு வகை பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து பேசினார் விவசாயின் கேள்விகளுக்கு பதில் கூறினார். கீழக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் காளம்மாள் முன்னிலை வகித்தார். அவர் தமது உரையில் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள் முறையாக மக்களுக்கு கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். விவசாயிகள் இடுபொருள்கள் மற்றும் விதைகள் வேளாண்மை துறையில் மானியத்தில் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார். வேளாண்மை வணிகத்துறை சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் ராஜ்குமார் கலந்துகொண்டு திட்டங்கள் குறித்து கூறினார். அட்மா திட்ட மேலாளர் புஷ்மாலா அட்மா திட்டத்தில் விவசாயிகள் வெளிமாநிலம் தமிழக அளவில் உள் மாநில பயிற்சிகள். மாவட்ட அளவிலான பயிற்சிகள் பல்வேறு தலைப்புகளில் விவசாயிகள் பயிற்சி பெற்று ஒரு முன்னோடி விவசாயியாக தங்களை மாற்றிக் கொண்டு மற்ற விவசாயிகளுக்கும்  கூறி தங்கள் வருமானத்தை பெருக்கி வருகிறார்கள் என்று கூறினார். அட்மா திட்ட உதவி மேலாளர்கள்  பூவேந்திரன் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரையாற்றி வேளாண்மை துறை மானிய திட்டங்கள் குறித்து  விவசாயிகளுக்கு கூறினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் மூவேந்திரன் கூட்டத்திற்கு நன்றியுரை கூறினார். இறுதியில் விவசாயிகள் பதாகைகளுடன் தொழில் நுட்பங்களை கூறிக்கொண்டு அனைவரும் அதை கடைபிடிக்குமாறு கூறிக்கொண்டு பேரணியாகச் சென்றனர்.கீழக்கோட்டையில் பாசிப்பயறு சாகுபடி செய்த வயல்களில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண்மை விரிவாக்க உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட வயல் ஆய்வு பணி செய்து பூச்சிகள் மற்றும் நோய்கள் அதற்கான தீர்வுகள் விவசாயிகளுக்கு நேரடியாக சென்று விளக்கி கூறப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad