மதுரையில் மீண்டும் 4 தங்குவிடுதிகளுக்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல். - அதிர்ச்சியில் மாநகர காவல்துறையினர்.
மதுரையில் உள்ள பிரபல தங்கு விடுதிகளான சின்ன சொக்கிக்குளம் பகுதியில் உள்ள ஜெசி ரெசிடென்சி, காளவாசல் பகுதியில் உள்ள ஜெர்மானஸ் தங்கும் விடுதி, பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மதுரை ரெசிடென்சி, பெருங்குடி பகுதியில் உள்ள அமிக்கா ஆகிய நான்கு தங்கு விடுதிகளுக்கு இமெயில்மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனை அடுத்து இமெயில் வந்த தங்கும் விடுதியை சேர்ந்த ஊழியர்கள் மாநகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். சோதனையில் இது புரளி என்று தெரியவந்தது, மேலும், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் நான்கு பள்ளியில் இதேபோன்று இமெயிலில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது.
அப்பொழுதும் சோதனை செய்த போலீசார் இமெயில் மூலம் வந்த தகவல் புரளி என தெரியவந்தது. தொடர்ந்து, மதுரை மாநகரில் இமெயில் மூலமாக பள்ளிக்கும், தங்கும் விடுதிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர்ச்சியாக இது போன்ற மிரட்டல் விடுப்பது யார்.? தனி நபரா.? அல்லது அல்லது குழுவாக இணைந்து இமெயில் மூலம் அச்சுறுத்தி வருகிறாரா.? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment