உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியது ஸ்டாலின் மகன் என்று பிறப்பால் வந்தது உழைப்பால் வரவில்லை - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 1 October 2024

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியது ஸ்டாலின் மகன் என்று பிறப்பால் வந்தது உழைப்பால் வரவில்லை


உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியது ஸ்டாலின் மகன் என்று பிறப்பால் வந்தது உழைப்பால் வரவில்லை


திமுக கம்பெனியாக மாறிவிட்டது
உழைத்தால் எந்த நன்மை இல்லை என திமுக தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்


சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு


மதுரை கழக பொதுச்செயளாலர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம்,திருமங்கலம் தொகுதி கல்லுப்பட்டி ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்தும் ,மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் பேரையூரில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை ஒன்றிய கழகச் செயளாலர் ராமசாமி செய்து இருந்தார்.


இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்,முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆலோசனை வழங்கினார்.


மற்றும் இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன்,தவசி, மாணிக்கம், கருப்பையா, எஸ் எஸ் சரவணன்,மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ஜான்மகேந்திரன், புளியங்குளம் ராமகிருஷ்ணன், டாக்டர் விஜயபாண்டியன், மாணிக்கம், மாவட்ட கழக நிர்வாகிகள் சி.முருகன், வக்கீல் தமிழ் செல்வன், வக்கீல் திருப்பதி, உஷா,ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், கண்ணன், பிரபு சங்கர், மாவட்ட மாவட்ட அணி நிர்வாகிகள் வக்கீல் பாஸ்கர், பேரையூர் ராமகிஷ்ணன், தமிழழகன்,சிங்கராஜ பாண்டியன், துரைப்பாண்டி, சரவணன்பாண்டி, மகேந்திர பாண்டி, சிவசக்தி, காசிமாயன், பொதுக்குழு உறுப்பினர்கள்  சுமதி சாமிநாதன், சுதாகரன், பேரூர் கழக செயளாலர் நெடுமாறன், பாலசுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


ஆர் பி உதயகுமார் பேசியதாவது


இன்றைக்கு தமிழக அரசியலில் பிறப்பால் அங்கீகாரமா? உழைப்பால் அங்கீகாரமா என்று விவாதம் நடந்து கொண்டு வருகிறது. இன்றைக்கு பிறப்பால் அங்கீகாரத்தை அடைந்து சமூக நீதி, சமதர்மம் ஆகியவை கேலிக்கூத்தாகி இன்றைக்கு கற்கால ஆட்சியாக ,மன்னர் ஆட்சியாக உள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன்பு உதயநிதி நான் நடிகன் அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறினார், இன்றைக்கு துணை முதலமைச்சர் ஆகியுள்ளார் ,அதேபோல கருணாநிதி, வாரிசு அரசியலில் ஊக்குவிக்க திமுக சங்கர மடமல்ல என்று கூறினார் .ஆனால் இன்றைக்கு திமுக கம்பெனி ஆகிவிட்டு விட்டது தாத்தா, மகன், பேரன், கொள்ளுபேரன் என்ற பதவிக்கு வருகிறார்கள். அதனால் பொது வாழ்வில் உழைத்தால் என்ன பலன் என்று திமுக தொண்டர்கள் இன்றைக்கு நம்பிக்கை இழந்து விட்டனர்.


தற்பொழுது மதுரைக்கு உதயநிதி வந்த போது  ஒரு மணி நேரம் போக்குவரத்தை நிறுத்திவிட்டனர், முதலமைச்சருக்கு கூட இதுபோன்று கிடையாது அப்படி என்றால் மக்களை காக்க வைக்க காவல்துறைக்கு யார் உத்தரவிட்டது.


நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் உதயநிதி திமுகவிற்கு வெற்றியை பெற்று தந்துள்ளார் அதனால் தான் அந்த பதவி என்று கூறிவிட்டு இன்றைக்கு ஸ்டாலினை ஜோக்கர் நிலைக்கு பரிதாபமாக தள்ளி விட்டனர்.


முதலமைச்சர் பதவிக்கு தான் சில மரபுகள் உண்டு ஆனால் அதே மரபை தனது பெற்ற மகனுக்கு வழங்கி விதிமுறையை முதலமைச்சர் மீறி வருகிறார் ,அதேபோல் அமைச்சர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உதயநிதியை வைத்துவிட்டு இரண்டாவது இடத்தில் துரைமுருகன் உட்கார வைத்துள்ளார்கள்.


பதவி உயதநிதிக்கு, இடம் துரைமுருகனுக்கா, இன்றைக்கு மூன்றாவது இடத்தில் உள்ளவர் நாளைக்கு முதலிடத்தில் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.


இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வந்துவிட்டார், அதனால் டெல்லியில் இருந்து உடனடியாக பள்ளி கல்விக்கு நிதி விடுவித்தார்களா? கச்சத்தீவு, மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடித்தார்களா? ஜிஎஸ்டி  தொகை தந்துவிட்டார்களா? நீட் தேர்வை ரத்து செய்துவிட்டார்களா? வெள்ள நிவாரண நிதி வழங்கி விட்டார்களா?


இன்றைக்கு தனது மகனை துணை முதலமைச்சராகவும், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க தான் முதலமைச்சர் டெல்லி ஆசி வாங்க சென்றார்.


தற்பொழுது செந்தில் பாலாஜி நிபந்தனையை மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது இன்றைக்கு செந்தில் பாலாஜியை தியாகி போல முதலமைச்சர் பாராட்டுகிறார் அப்படி என்றால், அவர் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.


இன்றைக்கு குடும்ப வாரிசு அரசியலால் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது, இதே குடும்ப வாரிசு அரசியலை எதிர்த்த புரட்சித் தலைவரை கட்சியை விட்டு நீக்கினார் அதனை தொடர்ந்து 12 வருடம் வனவாசத்தை கருணாநிதி அனுபவித்தார். அதனை தொடர்ந்து வைகோ, ஸ்டாலினுக்கும் பிரச்சனை ஏற்பட்டது அதனை தொடர்ந்து வைகோ பிரிந்து சென்றார் தற்பொழுது சரணாகதி அடைந்து விட்டார், ஆனால் இன்றைக்கு திமுக எதிர்க்கும் ஒரே சக்தியாக எடப்பாடியார் உள்ளார்

அதேபோன்று தமிழக விளையாட்டு துறையை உலகமே பாராட்டுகிறது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து புளூகு மூட்டையை முதலமைச்சர் கூறி வருகிறார்  இப்போது நடைபெறும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டு வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அம்மா அரசு அமையும் என கூறினார்

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது;

இந்த திருமங்கலம் தொகுதி என்பது பல அமைச்சர்கள் உருவாக்கிய தொகுதியாகும், 1977ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் முதலமைச்சராக பதவியேற்றபோது, இந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பிடி சரஸ்வதியை அமைச்சராகினர் அதனைத் தொடர்ந்து காளிமுத்து வெற்றி பெற்று சட்டமன்ற பேரவை தலைவரனார், அதனைத் தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் அவர்களும் வெற்றிபெற்று அமைச்சரானார்.

இன்றைக்கு ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியும், உதயநிதியை துணை முதலமைச்சராக்கி சொந்த காசில் சூனியம் வைத்துள்ளார்.
இன்றைக்கு புள்ளி வைத்துள்ளனர் அது கோலமாகி விரைவில் அலங்கோலமாக மாறிவிடும்.

சட்டமன்றத்தில் அமைச்சர்கள் நுழையும் பொழுது சக அமைச்சர்கள் வணக்கம் தெரிவிப்பார்கள் ஆனால் தற்பொழுது சட்டமன்றத்தில் உதயநிதி திமுகவின் மூத்த அமைச்சர்களே உதயநிதிக்கு எழந்து நிற்கும் அவல நிலை உள்ளது. ஆனால் துரைமுருகன் வேறு வழியில்லாமல் முகத்தை திருப்பி கொண்டு விடுவார்

கடந்த 10 ஆண்டுகளில் நாம் மகத்தான சாதனை செய்தோம் மாதம் தோறும் 20 கிலோ அரிசி திட்டம் ,கறவை மாடுகள் ஆடுகள் திட்டம், மடிக்கணினிதிட்டம்  உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனத்திட்டம்,  தாலிக்கு 1பவுன் தங்கம் இவை எல்லாம் நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்  நமது ஒரே லட்சியம் 2026 தேர்தலில் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad