மதுரை விமான நிலைய 24 மணி நேர புதிய சேவைக்கு உள்நாட்டு, வெளி நாட்டு விமான சேவைகள் இல்லை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 1 October 2024

மதுரை விமான நிலைய 24 மணி நேர புதிய சேவைக்கு உள்நாட்டு, வெளி நாட்டு விமான சேவைகள் இல்லை.

 


மதுரை விமான நிலைய 24 மணி நேர புதிய சேவைக்கு உள்நாட்டு, வெளி நாட்டு விமான சேவைகள் இல்லை.


மதுரை விமான நிலையத்தில் சுங்கம், குடியேற்றம் பயண முனையம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் 24 மணி நேர சேவைக்கு பணியாளர்கள் நியமனம் இல்லை .*

*தென் மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசின் வெற்று அறிவிப்பு மதுரை விமான நிலைய 24 மணி நேர .*


*மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.*

அதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் மதுன விமான நிலையத்தில்  24 மணி நேர சேவைக்கான துவக்க விழா நடைபெறுகிறது

தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் காட்சி பொருளாகவும் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என அறிவித்து நீண்ட இடைவெளிக்கு பின் தற்பொழுது பணிகள் துவங்கி நடைபெறுகிறது.

அதேபோல் மதுரை விமான நிலைய 24 மணி நேர சேவைக்கு தமிழக எம்பிக்கள் குறிப்பாக தென் மாவட்ட எம்பிக்கள்மாணிக்கம் தாகூர் சு வெங்கடேசன் கார்த்தி சிதம்பரம் தங்க தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் தொடர்ந்து மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களைதொடர்ந்து சந்தித்து வலியுறுத்தியதன் பேரில் தற்போது 24 மணி நேர சேவை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை எடுத்து மத்திய அரசு குளிர்கால அட்டவணையின் போது புதிய விமான நிறுவனங்கள், புதிய சேவைகள் துவங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.


தற்போது மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை துவங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சர்வதேச விமான நிலையம் இந்த அறிவிப்பு மூலம் பயனடைய வாய்ப்புகள் மிகவும் குறைவு .

மதுரை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு தேவையான மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 305 பேரில் தற்போது260 பேர் மட்டுமே உள்ளனர்.

இவர்களை வைத்து மூன்று மணிநேர பணி துவங்குவதில் இடையூறு உள்ளது.

அதேபோல் மத்திய சுங்கத்துறை அதிகாரிகளும் சர்வதேச விமான நிலைய அறிவிப்பு வந்தாலும் சுழற்ச்சி முறையில் 24 x 7 மணி நேர சேவையில் மூன்று பிரிவுகளில்
பணியாற்ற அலுவலர்கள் நியமனம் இல்லை.

உள்நாட்டு பயணிகள் வெளிநாடு செல்வதற்கும்,வெளிநாட்டுப் பணிகள் வருகை பரிசோதனை செய்ய குடியேற்ற துறை அதிகாரிகள் (immigration) 24 x 7 நேர சேவைக்கு  புதிய அலுவலர்கள் நியமனம் இல்லை.
மேலும் சர்வ தேச சேவை 24 மணி நேரம் துவங்கப்படுமாயின்
மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் பணி நியமனம் செய்ய வேண்டும் . தற்போது வரை பணி நியமனம் செய்யப்படவில்லை

மேலும் தற்போது உள்ள இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் , ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களில் 24 மணி நேர சேவைக்கு ஊழியர்கள்  நியமனம் செய்யவில்லை.
தற்போது வரை 2 (ஷிப்ட் ) 14 மணி நேர சேவைக்கு ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்.

மேலும் முக்கியமாக மதுரை விமான நிலையத்தில் விமான சேவையை ஒருங்கிணைக்கும்
பயண முனைத்தில் (Terminal office) 2 ஷிப்ட் அதாவது 14 மணி நேர சேவைக்கு மட்டுமே ஊழியர்கள் உள்ளனர்.

மேலும் விமான நிலைய தூய்மை பணியாளர்கள், உள்கட்டமைப்பு பணியாளர்கள் எதுவும் நியமனம் செய்யப்படவில்லை.


இது தவிர
பன்னாட்டு விமான சேவைக்கு வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மதுரைக்கு வர தயக்கம் காட்டுகின்றன.

ஒன்றிய அரசின் அறிவிப்புகள் வழக்கம் போல வெற்று அறிவிப்பாக தான் உள்ளது -

எல்லா குளறுபடிகளுக்கும் காரணம் மத்திய சிவில் ஏவியன் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் அமைச்சரை மட்டுமே சேரும்.

மதுரை விமான நிலைய 24 மணி நேர சேவை அறிவிப்புகள்  தென்மாவட்ட மக்களுக்கு பயனில்லாத வெற்று அறிவிப்பு மட்டுமே.

No comments:

Post a Comment

Post Top Ad