மதுரையில் பெய்த கனமழை யால் குடியிருப்புக்குள் வீடுகளை ஆக்கிரமித்த மழை நீர் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 25 October 2024

மதுரையில் பெய்த கனமழை யால் குடியிருப்புக்குள் வீடுகளை ஆக்கிரமித்த மழை நீர்


 மதுரையில் பெய்த கனமழை யால் குடியிருப்புக்குள் வீடுகளை ஆக்கிரமித்த மழை நீர்; பாத்திரங்களை கொண்டு மழை நீரை அகற்றி வரும் மக்கள்


மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5cm மழைப்பொழிவு பதிவாகியுள்ளதால் மதுரை மாநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீர் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.


இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ந்து வீடுகளுக்குள் உள்ள பொருட்கள் அனைத்தும் மழை நீரில் சேதமடைந்து இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு அளாகி வருகின்றனர்.


குறிப்பாக மதுரை ஆத்திகுளம் வார்டு 42வது ஆத்திகுளம் வளர் தெரு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்கள் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad