மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டியில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளக் காதலன் மணிகண்டனை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் முருகனை போலீசார் கைது செய்தனர் டி கல்லுப்பட்டி கணபதியா பிள்ளை தெருவை சேர்ந்த முருகன் 34 இவரது மனைவி ஜோதிகா 25 இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது தற்போது ஜோதிகா ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் குச்சம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் டிரைவராக மெய்யனூத்துபட்டி மணிகண்டன் என்ற ஐயப்பன் 38 பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்த முருகன் பலமுறை கண்டித்தும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்தனர். நேற்று அதிகாலை முருகன் வேலைக்கு சென்று திரும்பி வரும் வேலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மணிகண்டனும் தனது மனைவி ஜோதியாகவும் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்த முருகன் அருகில் இருந்த கத்தியால் மணிகண்டனை குத்தி கொலை செய்தார். இறந்த மணிகண்டன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் தகவல் அறிந்து வந்த பேரையூர் இன்ஸ்பெக்டர் துர்காதேவி ,இளங்கோ, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் கொலை செய்த முருகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கல்லுப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம் செய்தியாளர்
R.வினோத்பாபு
No comments:
Post a Comment