திருமங்கலம் ரயில் நிலையத்தில் அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மை பணி செய்தனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 30 September 2024

திருமங்கலம் ரயில் நிலையத்தில் அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மை பணி செய்தனர்.


திருமங்கலம் ரயில் நிலையத்தில் அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மை பணி செய்தனர்.


மத்திய அரசின் 'தூய்மையே சேவை' என்ற திட்டத்தின் படி  திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட  மாணவ மாணவியர்கள் திருமங்கலம் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம், தண்டவாளம், மற்றும் வெளிப்புறம் ஆகிய பகுதிகளில்  இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்தனர்.


தூய்மை பணியை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா, ஸ்டேஷன் மாஸ்டர் பூம்பாண்டியன், ரயில் நிலைய உதவியாளர் அபிஜீத் குமார் சிங், கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், நாட்டு நல பணித்திட்ட அலுவலர் முனைவர் முனியாண்டி ஆகியோர் துவக்கி வைத்தனர். அப்போது முதல்வர் அப்துல் காதிர் மாணவ மாணவர்களிடையே பேசியதாவது:


தூய்மையான சூழல் நோய்களைத் தடுத்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும், குறிப்பாக, தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கும் எனவும் பொது இடங்களை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் தூய்மையான சூழல் என்பது நம் எதிர்கால சந்ததியினருக்கான நமது பங்களிப்பு ஆகும். எனவே, நாம் அனைவரும் இணைந்து தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் என்றார். பின்னர் பாதுகாப்பு கையுறை அணிந்து மாணவ-மாணவிகளும், முதல்வர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் முனியாண்டி, இராமுத்தாய் மணிமேகலை, விஜயராஜன், இன்பமேரி, ஜோதி, ஆறுமுக ஜோதி, மயில், பழனியம்மாள், கதிரேசன் நாராயணபிரபு மற்றும் சிஸ்டம் அட்மின் உதய கதிரவன் ஆகியோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இத்தூய்மை பணியின் மூலம் சுமார் ஒன்றரை டன் குப்பைகள் அகற்றப்பட்டு ரயில் நிலையம் சுத்தம் செய்யப்பட்டன. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அப்துல் அஜீஸ், பிரகாஷ், முத்தையன் பாண்டி, விக்னேஸ்வரன், ரெபின் டினோ, தோபா அபினேஷ், ரஹ்மான் அலி, தருண், மனோரஞ்சன், அசோக் மற்றும் மாணவிகள் முத்துமணி, சிவப்பிரியா, செண்பகஜோதி, புவனேஸ்வரி, வாணிஸ்ரீ, நிவேதா வைஷ்ணவி, ஜான்சி, பூஜா, ரூபாஸ்ரீ, ஹேமாஸ்ரீ, துர்கா உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு  நாட்டு நலப்பணித்திட்ட மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி ஆகியோர் உரிய நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad