மதுரை சோளங்குருணியில் சிசிடிவி கேமரா பயன்பாட்டினை திறந்து வைத்த திருமங்கலம் காவல்துறை கண்காணிப்பாளர் அருள் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 3 September 2024

மதுரை சோளங்குருணியில் சிசிடிவி கேமரா பயன்பாட்டினை திறந்து வைத்த திருமங்கலம் காவல்துறை கண்காணிப்பாளர் அருள்


மதுரை சோளங்குருணியில் சிசிடிவி கேமரா பயன்பாட்டினை திறந்து வைத்த  திருமங்கலம் காவல்துறை கண்காணிப்பாளர் அருள்


ரூபாய் 60 ஆயிரம்  மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமரா  வலையங்குளம் சோளங்குருணி சாலையில் காவல் துறை கண்காணிப்பு செயல்பாட்டிற்கு வந்தது.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோளங்குருணி, அருகில் உள்ள நல்லூர், நெடுமதுரை ஈச்ச ளோடை, பாப்பனோடை, சமத்துவபுரம், கூடல் செங்குளம், குதிரை குத்தி  போன்ற கிராமபகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.


அவற்றை கண்காணிக்கவும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் தொடர்புடைய வீடியோ காட்சிகள் வாகனங்களின் பதிவுகளை பதிவு செய்ய சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை சார்பில் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது


இதனை எடுத்து சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்த சமுக சேவகர் ரவிச்சந்திரன் என்ற தன்னார்வலர் சோளங்குருணி கிராமத்திற்கு ரூபாய் 60 ஆயிரம் மதிப்பில்  அதிநவீன உயர்க சிசிடிவி கேமராக்களை வாங்கி சோளங்குருணி பேருந்து நிறுத்தம், வலையங்குளம் சாலை,  குதிரை குத்தி சாலை,  நல்லூர் சாலை ஆகிய இடங்களில் பொருத்தி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா செயல்பாட்டினை திருமங்கலம் காவல்துறை கண்காணிப்பாளர் அருள் திறந்து வைத்து
இது குறித்து  பொது மக்களிடம் கூறுகையில்


இந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்துமாறு காவல்துறை மூலம் பொது மக்களிடம் கோரிக்கை வைத்தோம் அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் 4 உயர் ரக சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.


இந்த கேமராக்கள் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களையோ அவர்கள் செல்லும் வாகனங்களையோ கண்காணிக்க முடியும் .


மேலும் ஏதாவது சண்டை சச்சரவு என்று ஏற்பட்டால் யார் முதலில் தவறு செய்தாது என்பதையும் கேமராக்களின் வீடியா  மூலம் அறிந்து கொள்ள முடியும்.


நேற்று முன்தினம் கூடக் கோவிலில் நடைபெற்ற  கொலை வழக்கில் கூட அருகில் இருந்த சிசிடிவி  கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம் .


மேலும்  ஆஸ்டின்பட்டி வட இந்திய வாலிபர் கொலை வழக்கிலும் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.


ஆகையால் சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் பல்வேறுபட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எங்களிடம் கோயில் திருவிழா அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்தால் அங்கு உடனடியாக அவர்களிடம் கூறுவது சிசிடிவி கேமரா பொருத்துங்கள் உடனே அனுமதி தருகிறேன் என கூறியதும் அவர்களும் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவற்றிற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.


இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் தன்னார்வலர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் காவல்துறை சார்பாக வாழ்த்துக்களை பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்


கண்காணிப்பு கேமரா திறப்பு விழாவில்  பெருங்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமணி மற்றும் சோளங்குருணி கிராம பொதுமக்கள் போலீசார் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad