திருமங்கலத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட கழக இளைஞர் அணி,திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 3 September 2024

திருமங்கலத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட கழக இளைஞர் அணி,திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருமங்கலத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட கழக இளைஞர் அணி,திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆர்.எஸ்.எஸ்.எஸின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசின் கல்வித் துறைக்கு நிதியை ஒதுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திராவிட கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முத்துக்கருப்பன் மாவட்ட கழகச் செயலாளர் தலைமையில் திருமங்கலம் பெரியார் சிலை முன்பு நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசான பாஜக அரசு மக்களுக்கு  பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் அரசின் கல்வித் துறைக்கு நிதியை ஒதுக்காத மத்திய அரசான பாஜக ஏற்க ஏன் முன்வரவில்லை. பாமர மக்கள்முதல் ஏழை எளிய மக்கள் அனைவரும் தமிழக அரசு உதவிபெறும் கல்வியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு எந்த ஒரு சலுகையும் இதுவரை அளிக்கப்படாதது ஏன்? அதை கண்டுகொள்ளாத பாரத பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை முன் வைத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  ரஞ்சித் குமார் வரேவேற்புரை யாற்றினார, கண்டன உரையை முனைவர் வா.நேரு மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் கண்டன உரையாற்றினார், மற்றும் பாஸ்கரன், கப்பலூர் கண்ணன், அறிவு பாண்டி, சே விசாலி, அறிவுச்செல்வி, மதன் குமார், சதீஷ்குமார், முகமது அல்தாப், ஆகியோர் முன்னிலை வைத்தனர். நன்றி உரை பொன் தரணிதரன் உசிலம்பட்டி கழக மாவட்ட மாணவரணி மற்றும் இக்கட்சியின் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திராவிட கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழகம் உசிலம்பட்டி கழக மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad