முல்லை பெரியார் அணை குறித்து வாய் திறக்காமல் மௌனியாய் இருக்கிறார் முதலமைச்சர் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 4 September 2024

முல்லை பெரியார் அணை குறித்து வாய் திறக்காமல் மௌனியாய் இருக்கிறார் முதலமைச்சர்


முல்லை பெரியார் அணை குறித்து வாய் திறக்காமல் மௌனியாய் இருக்கிறார் முதலமைச்சர்


முல்லை பெரியார் உரிமையை, பாதுகாப்பை நிலைநிறுத்த எடப்பாடியாரின் ஆணையை பெற்று போராட்டம் நடத்த தயார் ஏட்டு சுரக்காய் வீட்டுக்கு உதவாது அதேபோலத்தான் முதலமைச்சரின் புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்
கப்பலூர் டோல்கேட் பிரச்சனையில் அரசு வேடிக்கை பார்ப்பது வினோதமாக உள்ளது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி



மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கல்லுப்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில், கல்லுப்பட்டியில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.


உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், தமிழரசன், மாணிக்கம், மாநில நிர்வாகிகள் புளியங்குளம் ராமகிருஷ்ணன், வெற்றிவேல், மாணிக்கம், மாவட்ட கழக நிர்வாகிகள் சி.முருகன், வக்கீல் தமிழ்ச்செல்வன், வக்கீல் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், கண்ணன், பிரபு, மாவட்ட அணி நிர்வாகிகள் சரவண பாண்டி, பாஸ்கர்,சிவசக்தி, துரைப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்


ஆர் பி உதயகுமார் கூறியதாவது
கப்பலூர் டோல்கேட் பிரச்சனை மீண்டும் எழுந்துள்ளது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டது என்று கூறியுள்ளார் ஆனால் டோல்கேட்டில் கட்டணங்கள் வசூல் செய்யப்படுவதாக கூறி வருகிறார்கள்


இது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் கப்பலூர் டோல்கேட் விதிமுறையை மீதி வைக்கப்பட்டுள்ளது நான் ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களிலே சுங்கச்சாவடியை அகற்றுவேன் என்று கூறினார், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை இல்லை மீண்டும் உள்ளூர்வாசிகளுக்கு இந்த சுங்க சாவடி கேள்விக்குறியாக உள்ளது. இந்த சுங்கச்சாவடி ஊருக்குள் வெளியே எங்கேயும் வைத்துக் கொள்ளட்டும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை இந்த சுங்கச்சாவடி பிரச்சனையில் ஆளுங்கட்சி வேடிக்கை பார்ப்பது வினோதமாக உள்ளது, இந்த டோல்கேட் பிரச்சனைக்கு எத்தனை முறை சிறை செல்ல நான் தயாராக இருக்கிறேன், மீண்டும் இதற்கு பிரச்சினை காணாவிட்டால் மக்களுக்காக நாங்கள் போராடுவோம்.


இன்றைக்கு திமுக அரசு விளம்பர அரசாக உள்ளது, கார்ரேஸ் முதல் குதிரை ரேஸ் வரை விளம்பரப்படுத்தி வருகிறது, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு கொலை, கொள்ளை சம்பவம் நடை பெற்று வருகிறது ,அரசு இரும்பு கரம் கொண்டு அடக்காமல் இருப்பதால் கேட்க நாதியில்லாமல் உள்ளது.


இன்றைக்கு சிவகங்கையில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார், காவல்துறை கைகள் கட்டப்பட்டுளதா என்று தெரியவில்லை, ஏற்கனவே தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து  23 பேர் இறந்தார்கள் என்று எடப்பாடியார் சட்டமன்றத்தில் பேசியபோது, இனிமேல் அது போன்ற சம்பவம் நடைபெறாது என்று ஸ்டாலின் கூறினார் அதன் ஈரம் காய்வதற்குள் விழுப்புரம் கள்ளச்சாராயம் அருந்தி 75 பேர் செத்து மடிந்தார்கள். அவர்கள் குடும்பம் நடுதெருவில் உள்ளது.


இன்றைக்கு கோர்ட்சூட் அணிந்து கொண்டு அமெரிக்காவில் போட்டோ சூட் நடத்துகிறார் முதலமைச்சர், அவரது மகன் டீ ஷர்ட் ஜீன்ஸ் அணிந்து கொண்டு கார் ரேஸ் நடத்தி வருகிறார்கள். இதனால் மின்சார கட்டணம் குறைய போகிறதா? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறதா? இன்றைக்கு தமிழகம் கஜானாவை காலியாகி வருகிறது


தென் மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனையாக, ஐந்து மாவட்ட மக்களின் உரிமை பிரச்சினையானது முல்லை பெரியார் ஆகும், அம்மா ஆட்சி காலத்தில் மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி அணை பாதுகாப்பு உள்ளது என்று வல்லுனர் குழு சான்று அளித்து அதன் மூலம் அணையை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம், பேபி அணையை பழுதுபார்க்கப்பட்ட பின் 152 அடி எடுத்துக் கொள்ளலாம் என்ற வரலாற்று தீர்ப்பை அம்மா பெற்று கொடுத்தார்கள், அதனை தொடர்ந்து இதே மதுரையில் அம்மாவிற்கு விவசாயத்திற்கு திரண்டு நன்றிஅறிவிப்பு மாநாட்டை நடத்தினார்கள்.


கேரளாவில் அணை இருந்தாலும், தமிழக அரசு தான் அதை பராமரித்து வருகிறது என்பது எல்லோரும் அறிந்து,இன்றைக்கு கேரளா ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் புதிய அணைக்கட்ட பல்வேறு வதந்திகளையும் ஆதாரமில்லாமல் யூக செய்திகளை பரப்பி வருகிறார்கள்.


முல்லை பெரியாரின் முழு கொள்ளளவை தேக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள், நிபுணர்கள் குழு ஆய்வு அறிக்கை கொடுத்தும் கூட, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பிறகு கூட 142 அடியை தேய்க்க முடியவில்லை

No comments:

Post a Comment

Post Top Ad