மதுரையில் பாம்பிற்கு தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்த பாம்பு பிடி வீரர்- வைரல் வீடியோ - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 4 September 2024

மதுரையில் பாம்பிற்கு தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்த பாம்பு பிடி வீரர்- வைரல் வீடியோ


மதுரையில்   பாம்பிற்கு தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்த பாம்பு பிடி வீரர்- வைரல் வீடியோ



திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலகம் பின்பு உள்ள இந்து சமய அறநிலைத்துறை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில்திடீரென நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.


பாம்பை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு மற்றும் திருநகரைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபுக்கு  தகவல் தெரிவித்தனர்.


விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நான்கு அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக அங்கிருந்து மீட்டனர்.


அப்போது பாம்பு மிகவும் சோர்வாக தாகத்துடன் இருப்பதை கண்ட பாம்பு பிடி வீரர் அருகில் உள்ள கடையில் வாட்டர் பாட்டில் வாங்கி பாம்புவிற்கு தண்ணீர் கொடுத்தார்.


தாகத்தில் இருந்த நல்ல பாம்பு தண்ணீர் குடிப்பதை வீடியோவாக எடுத்துள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரல் ஆகி  வருகிறது.

நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம்
ஒப்படைத்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad