அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாக்குடி பகுதியை நாகமுத்து வயது 36 பெயிண்டர் மதுபோதை தகராறு காரணமாக வெட்டி படுகொலை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் நாகமுத்து வயது(36). அப்பகுதியில் பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவர் நேற்று நள்ளிரவு அப்பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த போது
குடிபோதையில் அங்கு வந்த 17 வயது சிறுவன் நாகமுத்துவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை வெட்டிக் கொலை செய்து முகத்தில் பெட்ரோலை ஊற்றி எரித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்த சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமயநல்லூர் அருகே அம்பலத்தட்டி கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்ற நபரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜாமினில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஜாமினில் வந்த நபர் மது போதையில் இளைஞரை வெட்டி கொன்ற சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment