இரும்பாடி கருப்பட்டி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 2 September 2024

இரும்பாடி கருப்பட்டி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


இரும்பாடி கருப்பட்டி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை



மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசுஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இந்த பகுதியில் உள்ள இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் சின்ன இரும்பாடி கருப்பட்டி கணேசபுரம் பொம்மன் பட்டி அம்மச்சியாபுரம் மேல் நாச்சிகுளம் கீழ் நாச்சிகுளம் சாலாச்சிபுரம் கரட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் மருத்துவ உதவி தேவைப்படும் பொதுமக்கள் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கும் அல்லது வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலையும்  கர்ப்பிணி பெண்கள்  தாய்மார்கள் மருத்துவ உதவிக்கு மேலக் கால் மன்னாடிமங்கலம் கச்சைகட்டி பகுதியில் உள்ள அரசுஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் மிகவும் சிரமப்படுவதாக கூறுகின்றனர் மேலும் மருத்துவ உதவிக்காக எங்கு சென்றாலும் 10 கிலோ மீட்டருக்கு மேல் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் சில நேரங்களில் உரிய நேரத்தில் மருத்துவ உதவி இல்லாமல் உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய நிலை ஏற்படுகிறது ஆகையால் இரும்பாடி ஊராட்சியில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் அல்லது கருப்பட்டி ஆகிய பகுதிகளில்  அரசு ஆரம்ப நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்  இதுகுறித்து கருப்பட்டியை சேர்ந்த செந்தில் கூறும்போது இந்த பகுதியில் உள்ள இரும்பாடி கருப்பட்டி  நாச்சிகுளம் ஆகிய மூன்று ஊராட்சிகளுமே  5000 தீற்க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகள் ஆகும் இங்கு சுமார் 20,000திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்தப் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இது குறித்து மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள்  பகுதி மக்களின் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு கருவுற்ற தாய்மார்களின் நலனை கருத்தில் கொண்டும் உடனடியாக அரசு ஆரம்ப சூழ்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad