தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா இ. பைக் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 25 September 2024

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா இ. பைக்

 


தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா இ. பைக் - மதுரை தனக்கன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த  ஒலா இ.பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.




மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கனகராஜ் அலுவலக பணியை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான திருமங்கலம் செல்வதற்காக நாகமலை புதுக்கோட்டையில் இருந்து தனக்கன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர் ஓட்டி வந்த ஒலா இ.பைக்  வாகனத்திலிருந்து திடீரென புகை வெளியாகி உள்ளது.



இதை பார்த்த கனகராஜ் தனது இரு சக்கர வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி உள்ளார் அப்போது மெதுவாக தீப்பிடிக்க துவங்கி மலமலவென தீப்பிடித்து இருசக்கர வாகனம் முழுவதும் ஏரிந்து நாசமானது. இருசக்கர வாகனம் தீ பிடிப்பதை அறிந்த கனகராஜ் வாகனத்தை விட்டு இறங்கி தள்ளி சென்றதால் அதிர்ஷ்டவசமாக கனகராஜுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.


மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்த  ஒலா இ.பைக் திடீரென தீப்பிடித்து ஏரிந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது மின் இருசக்கர வாகனம் தகதகவென எரியும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad