திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சமையல் கலை போட்டி
கின்னஸ் சாதனையாளர் செஃப் தாமு கலந்து கொண்டு பரிசுகளை வாங்கினார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்பில் அனைத்து கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சமையல் கலை போட்டி நடைபெற்றது.
நாள் முழுவதும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காலையில் சமையல் போட்டிகளும் மதியம் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. பரிசு அளிப்பு விழாவில் கலந்து கொண்ட கின்னஸ் சாதனையாளர், விஜய் டிவி புகழ் பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: கொரோனா காலத்திற்குப் பின்பு மீண்டும் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறைகள் வேகமாக வளர்ந்து வருவதாகவும் சமையல் கலைஞர்களுக்கும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கும் உலக அளவில் அதிகமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன எனவும் மாணவ மாணவியர்கள் தங்களுடைய கல்லூரி படிப்பின் போது முழு ஈடுபாட்டுடன் பயின்று திறமைகளை வளர்த்துக் கொண்டால் மிகச் சிறந்த எதிர்காலத்தை அடையலாம் என கூறினார்.
கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா தலைமையுரையும், கல்லூரி முதல்வர் டாக்டர். அப்துல் காதிர் வரவேற்புரையும் ஆற்றினர். நிகழ்ச்சியில் பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டல் பொது மேலாளர் செந்தில் ராஜன், பசுமலை தாஜ் கேட்வே ஹோட்டல் எக்ஸிக்யூடிவ் செஃப் கணேஷ், ஜி. ஆர். டி கிராண்ட் ஹோட்டல் புரடக்சன் மேனேஜர் ஜெயபாண்டி, செஃப் ராம சதாசிவன் மற்றும் ஹோட்டல் கோர்ட் யார்டு மேரியட் ட்ரைனிங் மேனேஜர் சுபராத் சரஃப் ஆகியோர் போட்டிகளின் நடுவர்களாக பணியாற்றி பரிசுக்குரிய மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்தனர்.
இப்போட்டிகளில் திருச்சி ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை பேராசிரியர் பார்த்தசாரதி, திருச்சி எஸ்.ஆர்.எம் கல்லூரி பேராசிரியர் பிரகாஷ், ராமநாதபுரம் மெல்வின் கல்லூரி பேராசிரியர் ரமேஷ், மதுரை காமராசர் கல்லூரி பேராசிரியை ஹம்சத்வனி, கெஸ்டோ கல்லூரி பேராசிரியர்கள் இம்தியாஸ், லட்சுமண குமார் மற்றும் கோயம்புத்தூர் என். ஜி. பி. கல்லூரி பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் கல்லூரி மாணவ-மாணவியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அன்னை பாத்திமா கல்லூரி ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் பால்ராஜ் தலைமையில் பேராசிரியர்கள் விக்னேஸ்வர சீமாட்டி, செந்தில், அருண்குமார், கங்காதரன், செஃப் கமல் ஆனந்த் மற்றும் செண்பகராஜ் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியை மாணவிகள் ராபியா, ஸ்ரேயா மற்றும் செல்சியா ஆகியோர் தொகுத்து வழங்கினார். இறுதியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment