ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் திருமங்கலம் வட்டக்கிளையின் செயற்குழு கூட்டம் இன்று சங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டக்கிளையின் தலைவர் ஜனாப் கே.மபூப்பாட்சா தலைமை தாங்கினார்! துணை தலைவர் ஆர்.வெங்கிட கிருஷ்ணன் செயற்குழு உறுப்பினர்களை வரவேற்று உரையாற்றினார். செயலாளர் என்.நடராஜன் செயலாளர் அறிக்கையையும், பொருளாளர் ஆர்.பாலகிருஷ்ணன் சங்கத்தின் வரவு செலவு அறிக்கையையும் வாசித்து செயற்குழுவின் ஒப்புதலைப் பெற்றனர்.திருமங்கலத்தில் மத்திய அரசின் திட்டமான மக்களுக்கு குடிநீர் வழங்க தோண்டிய பள்ளங்களால் சாலைகள் பழுதாகி மூத்த குடிமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கும்,இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது என்றும் சாலைகளை சீரமைக்க திருமங்கலம் நகராட்சி ஆணையரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் குரல் எழுப்பினர்! இவர்களின் கோரிக்கையை ஏற்று திருமங்கலம் நகராட்சி ஆணையரை பழுதடைந்த சாலைகளை செப்பனிட நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ அரசு தேர்தலின் போது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு பத்து சதவீதம் ஊக்க தொகை வழங்கப்படும் என்ற வாக்குறிதியை நிறைவைற்றக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்னோரன்ன தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.தீர்மானங்களை அமைப்பு செயலாளர் ரகுநாதன் வாசித்தார். இனைச் செயலாளர் எம்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment