திருமங்கலம் அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் முன்பு , குவாரியால் ஏற்படும் பாதிப்புகளை ஆவேசமாக பேசிய விவசாயிகள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 18 September 2024

திருமங்கலம் அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் முன்பு , குவாரியால் ஏற்படும் பாதிப்புகளை ஆவேசமாக பேசிய விவசாயிகள்.


திருமங்கலம் அருகே கல்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் முன்பு , குவாரியால் ஏற்படும் பாதிப்புகளை ஆவேசமாக பேசிய விவசாயிகள்.




மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில், புதிதாக கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது . இக் கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

          
இக்கூட்டத்தில் திருமால் கிராமத்தில் ஏற்கனவே கல்குவாரி அமைக்கப்பட்டு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கிராம மக்கள் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மக்கள் தெரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, விவசாய விளை பயிர்கள்,  விளை நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் ஆதாரமும் அழிந்து வருவதாகவும், மேலும் கனரக வாகனங்கள் சென்று வருவதால் , கிராம சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி தருவதால் பெண்கள் , குழந்தைகள் சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்படுவது உடன்,  வாகன விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதை சுட்டிக்காட்டி பேசியதுடன், கல்குவாரியில் அதி பயங்கர வெடிச்சத்தத்தை உருவாக்கும் வெடிகளை பயன்படுத்தி வருவதால், அருகாமையில் உள்ள வீடுகள் நில அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாவதுடன், விவசாயிகளின் நலன் கருதியும்,  கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய விளை நிலங்களை பாதுகாக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட உள்ள கல் குவாரியை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , அதிகாரிகள் முன்பு கிராம மக்கள் தங்களுடைய எதிர்ப்பு குரலை எழுப்பினர். மேலும் ஏற்கனவே இயங்கி வரும் கல்குவாரியில் இருந்து சிறிது தொலைவிலேயே புதிய குவாரி அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால்,  பல்வேறு விதிமுறைகளை மீறி ஆளுங்கட்சியினர் கல்குவாரி அமைப்பதற்கு அரசு அதிகாரிகள் உறுதுணையுடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

No comments:

Post a Comment

Post Top Ad