குஜராத்தில் சுங்கச்சாவடி அமைக்காத மோடி , தமிழகத்தில் 67 சுங்கச் சாவடி அமைத்து , அத்துடன் 17 சதவீத சுங்க வரியையும் உயர்த்தி மத்திய அரசு, தமிழக மக்களை வஞ்சிக்கிறது - முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திருமங்கலத்தில் பேச்சு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அச்சம்பட்டி கிராமத்தில், ரூ 20 லட்சம் செலவில் பல்நோக்கு மையம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஆர்.பி உதயகுமார் அடிக்கல் நாட்டிய பின்பு, அவர் பேசும்போது ,
குஜராத்தில் ஒரு சுங்கச் சாவடியை கூட அமைக்காத மோடி, தமிழகத்தில் மட்டும் 67 சுங்கச்சாவடி அமைத்து வஞ்சிப்பது ஏன்? கேரளாவில் 5 சுங்கச்சாவடிகளும், மகாராஷ்டிராவில் 44 சுங்கச்சாவடிகள் உள்ளது , இப்படி பார்க்கும்போது இந்த கொடுமையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் , ஏற்கனவே சுங்கச்சாவடியால் அவதிப்பட்டு வரும் தமிழ்நாட்டு மக்களுக்கு , 17 சதவீதம் சுங்க வரியை உயர்த்தி உள்ளது.
இதனை வாபஸ் வாங்க வேண்டும் மத்திய அரசு , அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். 67 சுங்கச் சாவடியை கடந்து செல்லும் போது வண்டியின் விலையை விட வரி அதிகமாக செலுத்த வேண்டி உள்ளது. மேலும் புதிதாக மூன்று சுங்கச்சாவடிகளை உருவாக்கப் போவதாக மத்திய அரசு கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மாநில அரசு எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் - என்றார்
No comments:
Post a Comment