மதுரையில் அவசர மருத்துவ உதவிக்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தி ஊழியர்களை தாக்கிய நபர் கைது - மதுரையில் தொடரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீதான தாக்குதலால் பரபரப்பு அச்சத்துடன் அவசர உதவிகளுக்கு செல்லும் நிலை - காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க கோரிக்கை
மதுரை மாநகர் கோச்சடை நடராஜ்நகர் பகுதியில் முருகேஸ்வரி என்பவர் தொடர்புகொண்டு 108 ஆம்புலன்ஸ்க்கு சேவையை அழைத்துள்ளார். அப்போது கணேசன் என்பவர் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்றபட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளார். இதனைடுத்து மதுரை பைபாஸ் சாலை பகுதியில் பணியில் இருந்த 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு சென்றது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளரான மதுரை வாடிப்பட்டி வைரவ நத்தம் பகுதியைச் சேர்ந்த தேவதா என்பவர் காயமடைந்த கணேசனை பரிசோதித்துள்ளனர்.
பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயற்சி செய்துள்ளனர் அப்போது அங்கு வந்த காயமடைந்த நோயாளி கணேசனின் மகன் சரவணகுமார் என்பவர் தனது தந்தையை ஆம்புலன்ஸ்சில் ஏற்றக்கூடாது எனக் கூறி வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் பெண் உதவியாளரான தேவதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி பேசியதோடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருண்குமாரையும் கடுமையாக தாக்கியுள்ளார்
இதனைத்தொடர்ந்தும் ஆம்புலன்சில் ஏற்றக்கூடாது என கூறி கொலை மிரட்டல் விடுத்தபடி ஆம்புலன்ஸ் வாகனம் மீதும், கண்ணாடி மீது கல்லை கொண்டு வீசி சேதப்படுத்தியுள்ளார். ்தொடர்ந்தும் ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்க முயன்ற நிலையில் ஆம்புலன்ஸ்சை அங்கிருந்து எடுத்துச்சென்றுள்ளனர்
இதனையடுத்து சரவணக்குமார் தாக்கயதில் காயமடைந்த 108 ஆம்புலன்ஸ் அருண்குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக எஸ் எஸ் கனி காவல் நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளர் தேவதா அளித்த புகாரில் 108 ஆம்புலன்ஸ் பெண் ஊழியர் மற்றும் ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு ஆம்புலன்ஸ் சேதப்படுத்தியதாக கணேசனின் மகன் சரவணகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவசர மருத்துவ தேவைக்காக செல்லக்கூடிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
மேலும் சாலை விபத்து , சமூக ரீதியான மோதல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மருத்துவ அவசர உதவிக்காக செல்லும் போது ஆம்புலன்ஸ் பெண் ஊழியர்கள் மீதான தாக்குதலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீதான தாக்குதலும் அதிகரித்து வருவதால் இது போன்ற இடங்களுக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அச்சத்தோடு செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே மருத்துவம் சார்ந்த ஊழியர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுபோன்று ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எ ன ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment