"புதிய பாரத எழுத்தறிவு திட்டம்" சார்ந்த எழுத்தறிவு கொண்டாட்ட நிகழ்வுகள்:
1.மண்டல அளவிலான எழுத்தறிவு கொண்டாட்டம்:
தேதி -20 .9. 2024 மற்றும் 21.9.2014
இடம்-வல்லப வித்யாலயா, திருவிளான்பட்டி , அழகர்கோயில் மெயின் ரோடு, மதுரை.
மாவட்ட அளவிலான எழுத்தறிவு தின கொண்டாட்டம் :
தேதி - 11/09/2024, புதன்கிழமை
இடம் - முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகம்,மதுரை.
போட்டிக்கான தலைப்பு - "எழுத்தறிவு கல்வியின் அவசியம்"
போட்டிக்கான நேரம் - 10 நிமிடம்.
ஒவ்வொரு போட்டிக்கும் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு பெறும் நபர் அல்லது குழு மண்டல அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்படுவர்.
பங்கேற்பாளர்கள் : புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற் போர், தன்னார்வலர்கள், ஆர்வமுள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், DIET விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள்.
ஒரு பங்கேற்பாளர் எத்தனை போட்டிகளில் வேண்டுமென்றாலும் கலந்து கொள்ளலாம்.
போட்டிகள் இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன -
மேடை நிகழ்ச்சிகள் மற்றும் மேடை அல்லாத நிகழ்ச்சிகள்.
மேடை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல், நாட்டுப்புற இசை கருவி இசைத்தல், பரதநாட்டியம், நாட்டுப்புற ஆடல் (கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், வள்ளி கும்மியாட்டம், தேவராட்டம், காவடியாட்டம், பொய்க்கால் ஆட்டம், புலியாட்டம், எருதாட்டம் மற்றும் இதர நாட்டுப்புற நடனங்கள்).
மேடை அல்லாத நிகழ்ச்சிகளில் ஓவியப்போட்டி, சிறு கட்டுரை போட்டி, கவிதை போட்டி, கோல போட்டி, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாரம்பரிய உணவு தயாரித்தல் போட்டி.
குறிப்பு: மாவட்ட அளவில் வெற்றி பெறும் பங்கேற்பாளர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு பெறும் நபர் அல்லது குழு மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்படுவர்.
மண்டல அளவில் வெற்றி பெறும் பங்கேற்பாளர்கள் மாநில அளவிலான எழுத்தறிவு விருதுக்கு தகுதி பெறுவர்.
எனவே ஆர்வமுள்ள அனைத்து தன்னார்வலர்கள், கற்போர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment