341 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் பெண் கைது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழ உரப்பனூரை சேர்ந்த பிரவீன் 32 இவரது மனைவி வைத்தீஸ்வரி 28 பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகின்றனர் .இவர்கள் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து திருமங்கலம் போலீசார் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது மினி வேனில் இருந்து பிரவீன் என்பவர் குட்கா புகையிலை பொருட்களை இறக்கி வைத்து கொண்டிருந்தார் இதை பார்த்த போலீசார்கள் உடனே அந்த மினி வேனை நிறுத்தி சோதனைகளில் ஈடுபட்டனர் அப்பொழுது பிரவீன் குமார் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடிவிட்டார் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 341 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவர் மனைவியான வைத்தீஸ்வரியை கைது செய்தனர் தப்பி ஓடிய பிரவினை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment