மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 22 September 2024

மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது


மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர்   நெல்லை பாலுவிற்கு  சிறந்த சமூக சேவகருக்கான விருது


ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள்  வழங்கினார்

மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதினை ஆழ்வார்திருநகரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் வழங்கினார்

பொதுக்குழு கூட்டம்

ஆழ்வார்திருநகரி யாதவ ஐந்தாம் திருநாள் பஜனை மடத்தில் தாம்ப்ராஸ் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம், பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு முதல்வன் விருது மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெருமக்களுக்கு சிறப்பு விருது என முப்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தாம்ப்ராஸ் சங்க மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீரங்கம் வரதராஜன்  தலைமை தாங்கினார்.   சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல்ஸ் சீனியர்  உதவி செயல் தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

ஜீயர் சுவாமிகள்


விழாவில் ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் பங்கேற்று முதல்வன் விருது மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெருமக்களுக்கு சிறப்பு விருதினை வழங்கி பாராட்டி பேசினார்

நாம் நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். இந்திய நாட்டின் பண்பாடு மிக உயர்ந்தது.
பிராமண சமுதாயம் எந்த வித்தியாசமும் பார்க்காமல் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதன்படி செயலாற்ற வேண்டும். காயத்ரி ஜெபத்தை இடைவிடாமல் சொல்ல வேண்டும்.

நமக்கு கொள்கை கோட்பாடுகள் உண்டு .நமது குழந்தைகளை அறிவார்ந்த குழந்தைகளாக வளர்க்க வேண்டும்.


கொரோனா காலகட்டத்தில் ஹரே ராம ஹரே ராமா என்ற மந்திரம் உலகம் முழுக்க ஒலிக்க பெற்று அந்த பிரார்த்தனையின் மூலம் கொரோனா ஒழிந்தது. ராம நாமா மந்திரத்திற்கு இணை வேறு எதுவும் உலகில் இல்லை. என்றார் அவர்.மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தொடர்ச்சியாக 1250 நாட்களாக வறியவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இந்த செயல் பாராட்டத்தக்கது. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்றார். இதைத் தொடர்ந்து, நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு முதல்வன் விருதினை அவர் வழங்கி வாழ்த்தி பேசினார்.   விழாவில் பேராசிரியர் ராமசுப்பிரமணியம், ராஜாராம், ஸ்ரீனிவாச தாத்தம், மதுரகவி, சிவக்குமார், ஐயப்பன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
தெற்கு ஆத்தூரை சேர்ந்த சுபஸ்ரீ முத்து மற்றும் முருக ஸ்ரீ முத்து ஆகியோர் இரட்டையர்கள். இவர்கள் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவுடன் நீட் தேர்விலும் சிறந்த மதிப்பு பெற்று இரண்டு பேருமே மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியு உள்ளனர். இவர்களுக்கும்
எம்பெருமானார் ஜீவர் சுவாமிகள் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கி வாழ்த்தி பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad