முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மணிமாறன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவரது சொந்த ஊரான முத்தப்பன்பட்டியில் உள்ள அவரது நினைவு இடத்தில் நினைவஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு,சாத்தூர் K.K.S.S.R. ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு,மூர்த்தி, எம்எல்ஏ தளபதி, முன்னாள் எம்பி சித்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று காலை முதல் மாலை வரை மணிமாறன் தலைமையில் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
No comments:
Post a Comment