சோழவந்தான் பேருந்து நிலையத்தில் திருமங்கலம் செல்வதற்காகமூன்று மணி நேரம் காத்திருந்த பயணிகள் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 31 August 2024

சோழவந்தான் பேருந்து நிலையத்தில் திருமங்கலம் செல்வதற்காகமூன்று மணி நேரம் காத்திருந்த பயணிகள்


சோழவந்தான் பேருந்து நிலையத்தில் திருமங்கலம் செல்வதற்காகமூன்று மணி நேரம் காத்திருந்த பயணிகள் முறையாக பேருந்துகளை இயக்க கோரிக்கை



சோழவந்தான் ஆகஸ்ட் 31 மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் செல்லும் பயணிகள் 3 மணி நேரம் காத்திருந்த நிலையில் மூன்று மணி நேரம் கழித்து திருமங்கலத்திற்கு அடுத்தடுத்து நான்கு பேருந்துகள் வந்ததால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் போக்குவரத்து கழகத்தை திட்டியவாறு பேருந்தில் ஏறி சென்ற அவலம் அரங்கேறியது



மதுரை மாவட்டம்
சோழவந்தானிலிருந்து திருமங்கலத்திற்கு சோழவந்தான் அரசு பணிமனையில் இருந்து 1 பேருந்தும் செக்கானூரணி அரசு பணிமனையில் இருந்து 3 பேருந்துகளும் திருமங்கலம் அரசு பணிமனையில் இருந்து 2பேருந்துகளுமாக மொத்தம் ஆறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது



கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சோழவந்தானிலிருந்து பகல் ஒரு மணிக்கு பிறகு சுமார் 2 மணி நேரம் பேருந்து இல்லாத நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்


இந்த நிலையில் நேற்று
மதியம் 2. 40க்கு திருமங்கலம் சென்ற சோழவந்தான் அரசு பணிமனையின் 999என்ற எண் கொண்ட பேருந்து சென்ற பிறகு மாலை 5 40 மணி வரை அடுத்துபேருந்து இல்லாததால் சோழவந்தான் பேருந்து நிலையத்தில்
திருமங்கலம் செக்கானூரணி உசிலம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்த அவல நிலை அரங்கேறியது


குறிப்பாக மாலை 4. 40க்கு வரவேண்டிய திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையைச் சேர்ந்த 1189 என்ற எண் கொண்ட பேருந்து   வராததாலும் சோழவந்தான் அரசு பணிமனையில் 999 பேருந்தில் நடத்துனர் இல்லாததாலும் இந்த நிலை ஏற்பட்டதாக போக்குவரத்து பணியாளர்கள் தெரிவித்தனர்


இது குறித்து சோழவந்தான் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கூறுகையில் சோழவந்தானிலிருந்து திருமங்கலத்திற்கு முறையாக பேருந்துகளை இயக்க அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டாலும் முறையான பதில் அளிப்பதில்லை சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நிலையத்தில் நாங்கள் பேருந்து எப்போது வரும்  என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தது மிகுந்த மனச்சுமையை ஏற்படுத்தி உள்ளது மேலும் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தகவல் சொல்வதற்கு கூட எந்த ஒரு அதிகாரிகளும் இல்லாத நிலையில்காத்திருந்தது மிகுந்த மன வேதனையை அளித்தது இது குறித்து பேருந்து நிலையத்தில் இருந்த
நேரக் காப்பாளிரிடம் கூறினால் அவரும் முறையாக பதிலளிக்கவில்லை ஆகையால் போக்குவரத்து துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடைவெளியில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பேருந்து நிலையத்தில்  கால அட்டவணையை உடனடியாக வைத்து அதற்குரிய நேர காப்பாளரை நியமிக்க வேண்டும் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு உரிய முறையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் போக்குவரத்து துறை அமைச்சர்  சோழவந்தான் பேருந்து நிலையத்தில் நேரில் வந்துஆய்வு செய்தால் மட்டுமே பயணிகளின் சிரமங்கள் என்னவென்று தெரியும்
என்று கூறினார்கள்


இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத போக்குவரத்து பணியாளர்கள் கூறுகையில்


சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் திருமங்கலத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பீக் ஹவர்  நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் மேலும் திடீரென விடுமுறை எடுக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு மாற்றுப் பணியாளர்களை தயார் நிலையில் வைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தினசரி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் அதிகாரி ஒருவர் இருந்து பேருந்துகளை முறையாக இயக்குவதற்கு உரிய வழிகாட்டுதல்களைசெய்ய வேண்டும் இதை செய்தாலே பொதுமக்களின் சிரமத்தை குறைக்கலாம் என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad