மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 46 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பூங்காக்கள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 31 August 2024

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 46 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பூங்காக்கள்.

IMG_20240831_141238_417

 மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 46 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பூங்காக்கள்.




திருமங்கலத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 22,27வது வார்டுகளில் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கு  46லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பூங்காக்கள் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் திறந்து வைத்தார்.மக்களின் நீண்ட கால கோரிக்கையான சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் வேண்டும் என்று நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று 22,27வது வார்டு கிறிஸ்டின் காலனி மற்றும் கற்பக நகரில் பூங்காக்கள் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை தலைவர் ஆதவன் அதியமான், கவுன்சிலர்கள் , சின்னச்சாமி, ராஜகுரு, பொறியாளர் ரத்தினவேல், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், மற்றும் நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad